LOCKDOWN MINISERIES #3

இவ்ளோ நாள் என் மனசுலயே வச்சு புழுங்கிகிட்டு இருந்த பாரத்தை இன்னிக்கு இறக்கி வச்சிர்லாம்னு இருக்கேன்.அது ஒரு காதல் . ரெண்டு இதயம் பேசும் மொழி❤️❤️ .எஸ் 💘💘💘 டுடே ஐ’ யம் கோய்ங் டூ டெல் யூ த ஸ்டோரி ஆப் லவ் ஆப் எ சிங்கிள் பாய்.
கொள்ளை அழகு தீராது
குருவி இங்கு சாகாது
வெள்ளை பூக்கள் வாடாது
வெயில் சூடு நேராது

அப்டின்னு பொயட்டிக்கலா சொல்ர மாதிரி ஒரு ஹில் ஸ்டேஷன். காலைல சூரியன் வெளிய தெரியாம மேகம் மறைக்க ,சுத்தி பனிமூட்டம். ஒரு ப்ளௌவர் ஷாப்க்கு வெளில நின்னுட்டு இருந்தேன். அப்பத்தான் அவள பாத்தேன். தூரத்துல ரோடு ஆரம்பிக்கிற இடத்துல நின்னுட்டு இருந்தா . இதுக்கு முன்னாடி ரெண்டு மூனு தடவயும் பாத்துருக்கேன் அவ என்னப் பாக்குறத. ஆனா இப்போ அவ என்னப் பாக்கல. தார் ரோட்டுக்கும் வலிக்காத மாதிரி நடந்து வந்தா . தெத்துப்பல்காரி ❤️.அவ எவ்ளோ ஸ்பீடா நடந்து வந்தான்னு தெர்ல. ஆனா எனக்கு ஸ்லோ மோஷன்லதான் தெரிஞ்சது. கடைக்கு வெளில ஒரு ரேடியோ இருந்துச்சு. அதுல ராஜா சாரோட தென்றல் வந்து தீண்டும்போது பாட்டு போட்ருந்துருக்கலாம். நமக்காக யாரு பேக் க்ரௌன்ட் சாங் போடப்போரது. நாமளே போட்டுக்கிட்டாதான் உண்டு.

தானந்தந்த தானந்தந்த தனனா தானந்தந்த தானந்தந்த தனனா னு நானே பிஜிஎம் பில்லப் பண்ணிட்டு இருக்கும்போது அவ என்ன க்ராஸ் பண்ணி கடைக்குள்ள போனா. என்னப்பாத்துக்கிட்டே உள்ளப்போனான்னுதான் நெனைக்கிறேன். அந்தக்கண்ணு அப்டிதான் இருந்துச்சு. ஆனா அது அடிச்ச ஷாக்ல எனக்கு எதுவும் ஏறல. உள்ளப்போனவ ஒரு பிளவர் பொக்கே வாங்கிட்டு நேரா எங்கிட்ட வந்தா. எனக்கு ஹார்ட் பக்கு பக்குன்னுலா அடிக்கல. ஏன்னா ஹார்ட்டே எங்கிட்ட இல்லன்னுதான் நெனைக்கிறேன். என் முன்னாடி வந்து நின்னு உன் பேரு தினேஷ்தானே! நா உன்ன பாத்துருக்கேன்னு சொல்லிட்டே பொக்கேவ எங்கைல கொடுத்தா . அத நா வங்கும்போது என் பேரு கா..ன்னு ஆரம்பிச்சா . அப்போ என் மைண்ட்குள்ள ஒரு குரல் கேட்டுச்சு. அது எங்கிட்ட என் வாழ்க்கைல மறக்கவே முடியாத ஒரு விசயம் சொல்லுச்சு . அப்டி அந்த குரல் எங்கிட்ட என்ன சொல்லுச்சு , அவ பேர சொல்லிட்டு அடுத்து அவ என்ன சொன்னான்னு சொல்றதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லனும். இந்தக்கதைய எழுதுறதுக்கு முன்னாடி இதுக்கு என்ன டைட்டில் வைக்கலாம்னு யோசிச்சப்ப ஒரே ஒரு டைட்டில் தான் தோனுச்சு . கார்னேஷன் கனவுகள். அவ கொண்டு வந்த பொக்கேல கார்னேஷன் இருந்துச்சான்னு தெர்ல. ரோஸ்கூட இருந்துருக்கலாம்.ஆனா கார்னேஷன் கனவுகள்தான் கரெக்ட்டா இருக்கும்னு தோனுது. இப்போ சொல்றேன். அந்த குரல் என்ன சொல்லுச்சுனா டேய் மச்சா சார் அட்டென்ட்டென்ஸ் எடுக்கப்போறாரு எந்திரி.

Leave a comment