Lockdown miniseries #6

ஒரு பேமஸான மீம் கன்டென்ட் இருக்கும். வேலையில்லா பட்டதாரி படத்துல கால்சென்டர்ல அம்பதாயிரம் ரூவா சம்பளம் வாங்குவான் தனுஷ் , யாரடி நீ மோகினி படத்துல ஓவர்நைட்ல கோடிங் கத்துக்கிட்டு ப்ராப்ளம் சால்வ் பண்ணுவான். நிறைய மீம் கிரியேட்டர்ஸ் இஞ்சிநியர்ஸ்ன்றதால இத கலாய்ச்சு நிறைய மீம் சுத்தும். நம்ம ஒரு Horti studentன்றதால அத பெருசா கண்டுக்காம விட்டுர்ரது. ஆனா வை ராஜா வை என்னும் திரைக்காவியத்த பாத்த அன்னிக்குதான் தெரிஞ்சது அந்தக்குரங்கு நம்மளயும் சும்மா விடலன்றது. வை ராஜா வை படத்துல வர்ர ஹீரோயினி ஒரு Plant Pathologist. அவளோட இன்ட்ரோ சீனே பத்து பூமிநாதன கலந்துவச்ச கிரிஞ்சா இருக்கும். வீட்டுக்கு முன்னாடி இருக்கிற ஒரு செடில ஒருத்தன் வண்டிய விட்டு ஏத்த ஒரு கிளை ஒடிஞ்சுரும் , அதுக்கு “அய்யயோ வேற அம்மம்மா வேற வேகமா போடா அம்பி வேற”ன்ற ரேஞ்ச்ல அந்த செடிக்கு ஒரு உயிர் இருக்கு அத காயப்படுத்திட்டன்னு வசனம் பேசிட்டு இருப்பா. டக்குன்னு கட் பண்ணி PAT final exam hallக்கு லைட்டா திருப்புனா அங்க ஒருத்தன் முட்ட முட்ட முழிச்சுட்டு கடைசியா எல்லா கேள்விக்கும் answerல Control and preventionல மொத வார்த்தையா Cut and Burnனு எழுதிட்டு இருந்தான்.இத ஏன் இங்க சொல்றன்னா , பேப்பர் எடுத்ததும் முதல்ல “உ”ன்னு பிள்ளையார் சுழி போட்ற மாதிரி பேத்தாலஜி எக்சாம்னா cut and burnனு prevention measuresல எழுதுறது ஒரு சம்பிரதாயம், ஒரு சடங்கு. ஆனா இங்க கிளை ஒடஞ்சதுக்கு கை ஒடஞ்ச மாதிரி பீல் குடுப்பா. ஏன்டா இந்தளவுக்காடா பேஸிக் ரிசெர்ச்கூட இல்லாம ஒரு கேரக்டருக்கு ஒரு profession சூஸ் பண்ணுவீங்க.

இதே படத்துல தலைவன் யுவன் ஒரு பாட்டு போட்ருப்பான் ‘பச்சை வண்ணப் பூவேன்னு ‘ . தலைவன் இசைய பத்தி எல்லாத்துக்கும் தெரியும் அதோட லிரிக்ஸ்தான் நம்ம போக்கஸ். மதன் கார்க்கி கிட்ட ஒரு plant pathalogistஅ லவ் பண்ண என்ன கவிதை எழுதுவீங்களோ அப்டி எழுதுங்கன்னு சொல்டாங்க போல . ஒரு வரி எழுதிருப்பாரு.. ப்பாஆஆஆ

என் கால் ஒன்றில்
முள் குத்தினால் அவள்
முள்ளுக்கு நோய் பார்க்கிறாள்

Pathology படிச்ச எவள்/ன்கிட்டயும் இவ்ளோ ரசனையா ஒரு வரி சொல்றத கனவுலகூட நெனச்சுப்பாக்கமாட்டேன். Suppose நீங்க ஒரு pathology படிக்கிற பொன்ன லவ் பண்ணா , அவகிட்ட ப்ரப்போஸ் பண்றதுக்கு ஏத்த ஒரு லைன் எழுதிருப்பாப்ல ‌

நான் கிளை
ஒன்றில் உந்தன் கை
பார்க்கிறேன் அதன்
ஓரத்தில் லேசாய்
கீறல்கள் கண்டாலே
என் நெஞ்சில் வலி
கொள்கிறேன் இதய சுவர்
மேலே உன் நிறம்
பார்த்தேன்
நானும் மரமாக ஏன்
வரம் கேட்டேன்

இதுக்கெல்லாம் உச்சகட்டமா ஒரு வரி இருக்கும் ..புல்லின்
மேலே பாதம் வைக்காமல்
செல்கின்றேன் பெண்ணே
உன் சொல்லை கேட்ட பின்னே

என்னென்ன சொல்றான் பாருங்க .. கம்பி கட்ற கதையெல்லா சொல்றான் 😂

Complete day ❤️

The least possible good day in a clg life in the clg like Horticultural College & Research Institute , Periyakulam is having a good meal or bunking max no of classes in a day . That’s why this is one of the best day in college life. More than best , Complete would be more fit into it. Having a prenight of thrills and joy , midnight of dance and dance and guess what only crazinessss.. A lazy morning 9.0 clock get up , Yet to be a good devotional get together , turned out to massive , interesting funny gathering , A good healthy (not one sided , not bullied ) cricket matches , A late afternoon lunch of baken chickens and chickens into the belly , and a evening end touching of watching a beautiful minnale romantic touch of evening to finish it off will definitely be the best complete f***king Day college history of this çr@zy people

GROUPU FOTA 📸

நாம ஒன்ன expect பண்ணி போவோம். ஆனா காலம்ன்ற காலன் நம்மள குப்புற தூக்கிபோட்டு அது இஷ்டத்துக்கு ஒன்ன நம்ம கைல குடுத்துட்டு போகும். சில நேரங்கள்ள அப்டி கொடுத்துட்டு போறது நம்ம எதிர்பார்ப்பவிட அழகானதா இருக்கும். ஆனா நம்ம மனசு கெடைக்காதத நெனச்சே ஏங்கிட்ட கெடச்ச அழகியல ரசிக்காமலே போயிரும். பின்னொரு நாள்ள அத உணர்ந்து இத எப்டி இவ்ளோ நாள் ரசிக்காம விட்டோம்னு நம்மள நாமளே ஏளனம் பண்ண வைக்கும். அதானே வாழ்க்கை.

இவன் இவ்ளோ தத்துவார்த்தமா ஆரம்பிக்கிறானே . ஏதோ பெரிய சம்பவம் சொல்லப்போறானோன்னு நெனைக்காதிங்க. இது எல்லாமே ஒரு சின்ன போட்டோவுக்காக. காலேஜ் பொங்கல் செலிபிரேஷன் முடிச்சிட்டு பசங்க எல்லாம் சேர்ந்து எடுத்த ஒரு க்ரூப் போட்டா அது .

ஆனா அன்னிக்கு ப்ளானே வேற. ப்ளாக் ஷுப்ல ஒரு வீடியோ பாத்துட்டு அதே மாதிரி பசங்க எல்லாரையும் சேர்த்து வச்சு ஒரு டிக்டாக் பண்ணணும்னு ஆசை. அப்பதான் பொங்கல் செலிபிரேஷன் வந்தது. அன்னிக்கு பங்சன் போறதுக்கு முன்னாடி எடுத்துட்டு போலாம்ன்னு ப்ளான் பண்ணிருந்தோம். ஆனா fun games ல லேட் ஆக , எல்லாரும் ரெடி ஆக லேட் ஆகிருச்சு. பொங்கல் பொங்க போகுதுன்னு பாதி பேரு கிளம்பி போய்ட்டானுங்க. பாதி பேரு மட்டும் வச்சு எடுத்தா நல்லா இருக்காதுன்னு நானும் கிளம்பி பங்சன் போயிட்டேன். முடிச்சிட்டு வந்தும் எடுக்க முடியாது நைட் இருண்டுரும் ப்ளான் collapse ன்ற கடுப்புலதான் அட்டென்ட் பண்ணேன். அப்ரம் கொஞ்ச நேரத்துலேயே அங்க இருந்த ஜாலி மூட்ல பண் பண்ணிட்டு ஒரு வழியா பங்சன் முடிஞ்சது. சரி இவன் எல்லாரையும் ஓயாமா கூப்டானே மனசு கஷ்டப்படுவானேன்னு நெனச்சானுங்களோ என்னவோ இப்ப வாடா எடுப்போம்னு கூப்டானுங்க. லைட் இல்ல வீடியோ எடுக்க முடியாது போட்டோ எடுப்போம்னு Pg hostel முன்னால அந்த போட்டோ எடுத்தோம். அதயே லைட்டா வீடியோ மாதிரி எடிட் பண்ணிக்கிலாம்னு சிபி சொன்னான்.ச்ச நம்ம நெனச்ச மாதிரி எடுக்க முடியலன்னு பீல் பண்ணாலும் , சரி பசங்கள நிக்க வச்சு ப்ராப்பரா ஒரு க்ரூப் போட்டோ எடுத்தாச்சுன்னு ஒரு நிம்மதி.

அதென்ன ஒரு க்ரூப் போட்டா எடுக்கிறது அவ்ளோ கஷ்டமான்னு கேட்டா. ஆமா அட்ராய்ட்ஸ பசங்கள வச்சி எடுக்கிறது கஷ்டம் தான். CRP invigilationல பிட் அடிக்கிறது எவ்ளோ கஷ்டமோ அதே அளவு கஷ்டம் அது. எந்த டூர்ல எடுத்த போட்டாவ பாத்தாலும் ப்ராப்பராவே இருக்காது. போடி Spice board முன்னால எடுத்த ஒரு போட்டோ இருக்கும். லோகேஷ் ஏதோ மிஸ்டர் தமிழ்நாடு போட்டிக்கு வந்தமாதிரி போஸ் கொடுத்துன்னு இருப்பான். பின்னாடி நாலு பேரு குதிரை மேல ஏர்ர மாதிரி தவ்வின்னு இருப்பானுங்க. இப்டிதான் இருக்கும் எல்லா போட்டாவும்.இன்னும் சிம்பிளா சொல்லனும்னா NSS Camp last day எடுத்த ரெண்டு போட்டா இருக்கும். பொண்ணுங்க மட்டும் நின்னு எடுத்த ஒரு போட்டா , பசங்க மட்டும் எடுத்த ஒன்னு. அது ரெண்டையும் பக்கத்துல பக்கத்துல வச்சு பாத்தாலே நா சொல்றது புரியும்.

இப்டி அதியசமான போட்டோ எடுக்கும்போது இருந்த சிச்சிவேஷன இப்போ யோசிச்சு பாத்தா செம்ம காமெடியா இருக்கும். அந்த கேமராக்கு பின்னாடி டோர்க்கு உள்ளார ஒரு பிரளயமே நடந்துன்னு இருந்துச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு மொட்ட மாடில இன்னொரு பிரளயம் நடந்துச்சு 😂.

Technically அந்த போட்டவா பாத்த ப்ளாக் பேக் க்ரௌன்ட்ல அருமையா இருக்கும். நெறைய கலர்ஸ் ஆட் ஆகிருக்கும். எல்லாரையுமே இண்டிவியுச்சுலா காட்டும். That is one of a great photo for everyone in the frame னு சத்தியமா சொல்லலாம். அ

இதெல்லாம் இப்போ ஏன் சொல்றேன்னா. We should cherish such small things in life ன்ற காரணத்துக்காக மட்டுமில்ல. இன்னிக்கு கொஞ்சம் போர் அடிச்சது என்ன பண்ணலாம்ன்னு பாத்திட்டுருக்கும்போது வல்லரசு ஸ்டேட்டஸ் பாத்து இத எழுதலாம்னு தோனுச்சு அதான்.

அப்ரம் இன்னோரு விஷயம். இதப்படிக்கிற எல்லாருகிட்டயும் சூர்யா நம்பர் இருக்கும்னு நெனைக்கிறேன். அவனுக்கு இந்த லிங்க் அனுப்பி விட்ருங்க. அன்னிக்கு இந்த மாதிரி வீடியோ எடுக்கப்போறோம் வந்துர்ரான்னு ஆயிரந்தடவ சொன்னேன். வந்துர்ரேன் மாப்ள வந்துர்ரேன் மாப்ளன்னு சொல்லிட்டு நைட்டு எந்த புதருக்குள்ள யார கூட்டிட்டு போனான்னு தெர்ல. காலைல வந்து என்ன மாப்ள என்னவிட்டு எடுத்துட்டியேன்னு கேட்டான். இதப்பாத்து பாத்து நோகட்டும் நாயி. சோ எல்லாரும் மறக்காம அனுப்பிருங்க

Home of Atrocities

குறிஞ்சி , முல்லை , மருதம்ன்னு கேள்வி பட்டதும் எல்லாருக்கும் ஒன்னொன்னு தோனும். தமிழ் , இலக்கணம்னு எதேதோ நினைவுக்கு வரலாம். ஆனா எங்களுக்கு எப்போதும் மொட்டமாடியும், ஓட்ட பக்கெட்களும் , மிட்நைட் டின்னர் சாப்டும் மெஸ் டேபுள்களும் , குப்பை சூழ் ரூம்களும் ,தூக்கங்களும் சிரிப்புகளும் , சந்தோஷங்களும் நிரம்பிய ஹாஸ்டல்ஸ்தான் ஞாபகம் வரும். குறிஞ்சி , முல்லைக்கெல்லாம் கருப்பொருள் , உரிப்பொருள்னு நெறைய இருக்கலாம் . ஆனா எங்க அட்ராய்ட்ஸ்க்கு ஒரே ஒரு உட்பொருள்தான்.

கலாய்தலும் கலாய்தல் நிமித்தங்களும்❤️

வாழ்க்கையோட எந்த நேரத்தையும் கலாய்ச்சுகிட்டே கடந்துபோற ஒரு கூட்டம். இயரே பெயில் ஆகி நிக்கும்போது தான் பெயிலானதுக்கு ஃபீலாகாமா ‘இர்ரா எங்கைகாச போட்டு உனக்கு ரீவேலுவேசன் போட்டு உன்ன பெயிலாக்குறன்டா’னு பாஸான ஒருத்தன கலாய்ச்சுட்டுருப்போம். ராகிங் பண்ண ஜூனியர்ஸ்ஸ கூப்ட்டு வச்சிட்டு நம்மளயே கலாய்ச்சிக்கிற வேற லெவல் சீனியர்ஸ் நாங்க. 😂

க்ளாஸ்ரூம் கொண்டாட்டங்கள் எல்லாமே தனிரகம். ‘புக்’ல துண்டு போட்டு பெஞ்ச் பிடிச்சு தூங்கலாம், பாதி க்ளாஸ் காலியா கிடக்கும்போதே புல் அட்டெண்ட்டென்ஸ் கொடுத்ததுக்கெல்லாம் முப்பது பையர் விடலாம். எல்லாத்துக்கும் மேல இல்லாத கால்குலேட்டர்ல டவுட்டு கேட்டு க்வஸ்டீன் பேப்பர் திருடனதெல்லாம் கின்னஸ் புக்ல ரெக்கார்ட்டா எழுதலாம். ரெக்கார்ட் எழுது கரெக்ட் டைம்ல சம்மிட் பண்றதெல்லாம் தனி கலை. அதெல்லாம் மூனு வருஷ ப்ராக்டிஸ்க்கு அப்ரமும் இன்னும் கைகூடல.

அலறிஅடிச்சிட்டு போற அந்த 7.30 க்ளாஸ் , க்ரௌண்ட்ல நாயா சுத்துற அந்த மூனு ரவுண்ட் , ஈவ்னிங் குடிக்கிற “க்ளாஸி” டீ , தியரி கக்ளாஸ்ல தூங்குறதுக்குனே அளவெடுத்து வச்ச மாதிரி ஒவ்வொரு செமஸ்டர்லயும் வர்ர நாலு கோர்ஸ் , எதுக்கு போறோம்னே தெரியாத டூர்ஸ் , அந்த டூர் பஸ் கொண்டாட்டங்கள் , ஜாலி பங்சன்ஸ் எல்லாத்தையும் மிஸ் பண்ணாலும் இப்போ ரொம்ப மிஸ் பண்றது அந்த 7ம் நம்பர் ரூம.

இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சா இப்டிதான் இந்த காலேஜ் லைப்ப மிஸ் பண்ணுவீங்கன்னு ட்ரெய்லர் போட்டு காமிக்கிறதுக்கே இந்த லாக்டவுன் வந்துச்சோ நினைக்கிறேன். இன்னும் நெறைய சொல்லலாம். போதும். கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும்

அன்பு ஒன்றுதான் அட்ராய்ட்ஸ்❤️

LOCKDOWN MINISERIES#5

Memories never die

கவிதைன்னு சொல்லிட்டு என்ன என்னத்தையோ கிறுக்கி வைக்கிறோமே இந்தப் பழக்கம் எப்போ ஸ்டார்ட் ஆச்சுன்னு வாழ்க்கைய கொஞ்ச ரீவைண்ட் பண்ணி பாத்தா காலச்சக்கரம் வேகமா சுத்தி 2015 ல போய் நிக்குது.

ஈரோடு. ஆதர்ஸ்னு ஒரு ஜெயிலு. அதுக்கு ஸ்கூல்னு இன்னொரு பேரு கூட வச்சிருந்தானுங்க. 11th std படிச்சிட்டு இருந்த பையன் ஏதோ ஒரு ப்ரேக்டைம்ல ரொம்ப சீரியஸா ஒரு suicide note எழுதிட்டு இருந்தான். By the by நான்தான் அது. உண்மைய சொல்லனும்னா அது half suicidal தான்.சூசைட் பண்ற ஐடியால இல்ல. அதாவது தற்கொலை எண்ணம் வர்ர அளவு இந்த ஹாஸ்டல் எண்ண தள்ளிருச்சு இங்க இருந்து என்ன கூட்டிட்டு போய்டுங்கன்னு வீட்டுல சொல்ல பயந்துட்டு அந்த லெட்டர எழுதி அத வச்சு வீட்டுக்கு போயிர்லாம்னு மாஸ்டர் ப்ளான் போட்டு வச்சிருந்தேன் . ( அந்த ப்ளானோட நீட்சியா உயிர்க்கு சேதாரம் இல்லாத அளவு உயரத்துல இருந்து குதிச்சிருவோம்னு ஸ்கூல் தேர்ட் ப்ளோர் போய் பாத்துட்டு ரொம்ப உயரமா இருக்கேன்னு திரும்ப பர்ஸ்ட் ப்ளோர் சன் ஸ்கிரின்ல நின்னத ரெண்டு பேரு பாத்து கூட்டுட்டு போனதுலா இன்னொரு கதை) அந்த மாஸ்டர் ப்ளான்க்காக லெட்டர் எழுதிட்டு இருக்கும்போதுதான் க்ளாஸ்பையன் ஒருத்தன் பாத்துட்டு என்னடா எழுதுறன்னு கேட்டான். ஐயையோ மாட்டிக்கிட்டோமேன்னு நா முழிச்சிட்டு இருக்கும்போது அவனே கேட்டான் கவிதை எழுதுறியான்னு. என்ன பாத்து ஏன் அப்டி கேட்டான்னு இன்னமும் தெர்ல. ஆமாண்டான்னு பொய் சொல்லிட்டு புல்லா எழுதி முடிச்சிட்டு உனக்கு காட்டுறேன்னு அவன அனுப்பி வச்சிட்டு லெட்டர எழுதி முடிச்சேன். இப்போ ஹாஸ்டல் போன கவிதை கேப்பானேன்னு உக்காந்து சொந்தக்கதை சோகக்கதைலா பீல் பண்ணி ரெண்டு பக்கத்து எழுதி எடுத்துட்டுப்போன நல்லா இருக்குன்னு சொல்டானுங்க. அப்போத்திலருந்து கவிதை எழுதுறதுனு ஆரம்பிச்சு கண்டதையும் கிறுக்கி வச்சினுருந்தேன். திடீர்னு ஒருநாள் நைட் அப்துல்கலாம் இறந்துபோய்ட்டார் மறுநாள் லீவுன்னு ஒருத்தன் வந்து சொன்னான். சில பேரு லீவுன்னு ஜாலியா இருந்தானுங்க. கலாம் பத்தி தெரிஞ்ச சில பேரு சோகமா இருந்தானுங்க. இன்னொரு மூலைல நான் எப்படா வீட்டுக்கு விடுவீங்கன்னு குத்த வச்சு பீல் பண்ணிட்டு இருந்தேன் . அந்த பீலிங்ல சம்மந்தமே இல்லாம கலாம் இறந்ததுக்கு ஒரு இரங்கற்பா மாதிரி ஒரு கவிதை எழுதுனேன். அது அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா ஹெட்மாஸ்டர் கைல சிக்கி நல்லா இருக்கேன்னு அவரு நோட்டிஸ் போர்டுல போட்டார். அதுக்கப்ரம் என்னென்னமோ பண்ணி அடம்பிடிச்சு ஸ்கூல பாதிலயே விட்டுட்டு ஒருவழியா திரும்ப வீட்டுக்கே வந்துட்டேன். டிசி வாங்க போன அன்னிக்கு நோட்டிஸ் போர்ட்ல பேர் பாத்துட்டாங்க அம்மா. அதப்பாத்த ஹெட்மாஸ்டர் அப்பத்தான் ஒரு மேட்டர் ஓபன் பண்ணாரு. நான் கேர்ள்ஸ் விங்ல க்ளாஸ் எடுக்கும்போது ஒரு பொண்ணுகூட கேட்டுச்சு யாரோ ஒரு பையன் கவிதை எழுதி நோட்டிஸ் போர்டுலலாம் போட்டிங்களாமே சார் யார்னு.. ஆனா இந்த நாயி + ஒரு கெட்ட வார்த்தை சேர்த்து டிசி வாங்கிட்டு போறான்னு திட்டுனாரு.

I was like …. யோவ் ஒரு மூணு மாசமா க்ளாஸ் எடுக்குறேன்ற பேர்ல அறு அறுன்னு அறுத்தியேயா அன்னிக்குலா இத சொல்லல..

LOCKDOWN MINISERIES#4

ஒருபோதும்
பேருந்துப்பயணம் செய்ய
வாய்ப்பேயில்லாத
கலைவாணன் பயல்
ஆணிமினுமினுங்கும்
பம்பரத்தை மல்லாக்க வைக்கிறான்
கோயில்பட்டி ரோட்டில்

அப்டின்னு ஒரு கவிதை படிச்சிருக்கேன். இன்னிக்கு வாட்ஸ்ஆப்ல ஒரு மெசேஜ் பாத்துட்டு இப்டி தோணுச்சு

ஒரு போதும் சோழியேதும் உருட்டிட வாய்ப்பேயில்லாத கலைவாணன் பயல் லூடோ சேலஞ்ச் அனுப்புகிறான் வாட்ஸ்ஆப்பில்

எவ்வளவு வேடிக்ககையா இருக்கு. தாயம் விளையாட்ரதோட சுவாரஸ்யமே நம்ம கைலருந்து உருட்ர சோழிலதான் இருக்கு. கைல நல்லா தேய்ச்சு நங்குன்னு தரைல கொட்டி உருட்டுற தாயக்கட்டையா , இல்லன்னா புளியமுத்த ஒரு பக்கம் தேய்ச்சு கொட்டாங்குச்சில சுத்தி தரைல அடிக்கிம்போது கிடைக்கிற சந்தோஷம்லா ஸ்கிரீன தொட்டவுடனே தடதடன்னு சுத்தி வந்து நிக்கிர ஒரு நம்பர்ல சத்தியமா கிடைக்காது. ஒரு ஆறு விழுந்தோன்னே காய நகத்துனாத்தான் அடுத்த தடவ உருட்டமுடியும் லூடோலலாம். ஆனா ஒராறு இருபண்ணெடண்டு முத்தாயம் ஒரு ரெண்டு போட்டு இந்தா இந்த ஆறுக்கு ஒரு குத்து குத்தாட்டத்துல ஒரு பண்ணெண்டு போட்டு ஒரே வாய்ப்புல பாதி ஆட்டத்த முடிக்கிற ப்ரோ ப்ளையர்கள சமாளிச்சு ஒரு நாள் முழுக்க ஒரு ஆட்டம் முடியாம இழுத்துட்டேப்போனாலும் கொஞ்சங்கூட போர் ஆடிக்காத தாயக்கட்டைக்கு ஈடாகுமாடா லூடோ

Ludo is a game

But தாயம் is an emotion🔥

LOCKDOWN MINISERIES #3

இவ்ளோ நாள் என் மனசுலயே வச்சு புழுங்கிகிட்டு இருந்த பாரத்தை இன்னிக்கு இறக்கி வச்சிர்லாம்னு இருக்கேன்.அது ஒரு காதல் . ரெண்டு இதயம் பேசும் மொழி❤️❤️ .எஸ் 💘💘💘 டுடே ஐ’ யம் கோய்ங் டூ டெல் யூ த ஸ்டோரி ஆப் லவ் ஆப் எ சிங்கிள் பாய்.
கொள்ளை அழகு தீராது
குருவி இங்கு சாகாது
வெள்ளை பூக்கள் வாடாது
வெயில் சூடு நேராது

அப்டின்னு பொயட்டிக்கலா சொல்ர மாதிரி ஒரு ஹில் ஸ்டேஷன். காலைல சூரியன் வெளிய தெரியாம மேகம் மறைக்க ,சுத்தி பனிமூட்டம். ஒரு ப்ளௌவர் ஷாப்க்கு வெளில நின்னுட்டு இருந்தேன். அப்பத்தான் அவள பாத்தேன். தூரத்துல ரோடு ஆரம்பிக்கிற இடத்துல நின்னுட்டு இருந்தா . இதுக்கு முன்னாடி ரெண்டு மூனு தடவயும் பாத்துருக்கேன் அவ என்னப் பாக்குறத. ஆனா இப்போ அவ என்னப் பாக்கல. தார் ரோட்டுக்கும் வலிக்காத மாதிரி நடந்து வந்தா . தெத்துப்பல்காரி ❤️.அவ எவ்ளோ ஸ்பீடா நடந்து வந்தான்னு தெர்ல. ஆனா எனக்கு ஸ்லோ மோஷன்லதான் தெரிஞ்சது. கடைக்கு வெளில ஒரு ரேடியோ இருந்துச்சு. அதுல ராஜா சாரோட தென்றல் வந்து தீண்டும்போது பாட்டு போட்ருந்துருக்கலாம். நமக்காக யாரு பேக் க்ரௌன்ட் சாங் போடப்போரது. நாமளே போட்டுக்கிட்டாதான் உண்டு.

தானந்தந்த தானந்தந்த தனனா தானந்தந்த தானந்தந்த தனனா னு நானே பிஜிஎம் பில்லப் பண்ணிட்டு இருக்கும்போது அவ என்ன க்ராஸ் பண்ணி கடைக்குள்ள போனா. என்னப்பாத்துக்கிட்டே உள்ளப்போனான்னுதான் நெனைக்கிறேன். அந்தக்கண்ணு அப்டிதான் இருந்துச்சு. ஆனா அது அடிச்ச ஷாக்ல எனக்கு எதுவும் ஏறல. உள்ளப்போனவ ஒரு பிளவர் பொக்கே வாங்கிட்டு நேரா எங்கிட்ட வந்தா. எனக்கு ஹார்ட் பக்கு பக்குன்னுலா அடிக்கல. ஏன்னா ஹார்ட்டே எங்கிட்ட இல்லன்னுதான் நெனைக்கிறேன். என் முன்னாடி வந்து நின்னு உன் பேரு தினேஷ்தானே! நா உன்ன பாத்துருக்கேன்னு சொல்லிட்டே பொக்கேவ எங்கைல கொடுத்தா . அத நா வங்கும்போது என் பேரு கா..ன்னு ஆரம்பிச்சா . அப்போ என் மைண்ட்குள்ள ஒரு குரல் கேட்டுச்சு. அது எங்கிட்ட என் வாழ்க்கைல மறக்கவே முடியாத ஒரு விசயம் சொல்லுச்சு . அப்டி அந்த குரல் எங்கிட்ட என்ன சொல்லுச்சு , அவ பேர சொல்லிட்டு அடுத்து அவ என்ன சொன்னான்னு சொல்றதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லனும். இந்தக்கதைய எழுதுறதுக்கு முன்னாடி இதுக்கு என்ன டைட்டில் வைக்கலாம்னு யோசிச்சப்ப ஒரே ஒரு டைட்டில் தான் தோனுச்சு . கார்னேஷன் கனவுகள். அவ கொண்டு வந்த பொக்கேல கார்னேஷன் இருந்துச்சான்னு தெர்ல. ரோஸ்கூட இருந்துருக்கலாம்.ஆனா கார்னேஷன் கனவுகள்தான் கரெக்ட்டா இருக்கும்னு தோனுது. இப்போ சொல்றேன். அந்த குரல் என்ன சொல்லுச்சுனா டேய் மச்சா சார் அட்டென்ட்டென்ஸ் எடுக்கப்போறாரு எந்திரி.

LOCKDOWN MINISERIES#2

Horticulture student ஆ இருக்றது எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கு தெரியுமா சார்? அதுவும் விவசாயம் பாக்கிற வீட்டுல Horti studenta இருக்றது எவ்ளோ டேஞ்சர்னு தெரியுமா?? தெர்லன்னா வாங்க சொல்றேன்

எள்ளு வெதைக்க போன எடத்துல எள்ளு வய பூக்கலியோ மொமன்ட் ஆகிப்போச்சு. எள்ளுல ஏதோ ஒரு வெரைட்டியா அதப்பத்தி கேட்டாங்க. அது பீல்டு க்ராப்பு நா ஹார்ட்டிகல்ச்சரு எங்களுக்கு இதெல்லாம் கிடையாதுனு சொன்னேன்.நல்லா தும்ப்பூவுல தூக்குப்போட்டுக்கிற மாதிரி உன்னையெல்லாம் AGRI படிக்க வச்சு உருப்படவான்னு ஒரு பதில். இதெல்லாம் பரவால்ல . கடைல போய் களைக்கொல்லி வாங்கிட்டு வாடான்னு சொன்னாங்க. சரி field crops தான் தெர்ல இது Agronomy தானே கெத்தா எங்கிட்ட கேளுங்க வாய் விட்டேன். எள்ளு சாகாம களை மட்டும் சாகுற மாதிரி வேணுமா. இதெல்லாம் எனக்கு சொல்லியே தர்லயேடா. நா படிச்சதே ரெண்டு தானே . Pre emergence னா Pendimethalin Post na Glyphosphate. இப்ப என்ன பண்றதுன்னு தெரியாம ஆ! அப்டி முன்னாடியே கேட்ருந்தா எனக்கு எள்ள பத்தி தெரியாதுன்னு சொல்லிருப்பன்லன்னு எக்குத்தப்பா ஏதோ எஸ்கேப் ஆகி வந்தேன். இதெல்லாம் உனக்குத் தேவையாடா 😒😒.

எல்லாத்துக்கும் உச்சகட்டமா முள்ளங்கி விதை எப்டி இருக்குன்னு தெரியலன்னு திட்ராங்க யுவர் ஆனர். Temperate vegetable course 1+0ன்னு அதுல ப்ராக்டிகள்ல்சே இல்லன்னு எப்டி இவங்களுக்கு புரிய வப்பேன்.( Practical இருந்தாலும் இவனுங்க முள்ளங்கி விதை காட்டிருக்க மாட்டானுங்க , காட்னாலும் நமக்கு தெரியாதுன்றது வேற விசயம்)

இப்டி மாட்டி மனக்கஷ்டம் பட்றதுக்கா நா horticulture படிக்க போனேன் 😪😪

LOCKDOWN MINISERIES #1

லாக்டவுனால் பாதிக்கப்பட்டேன். ஆம் நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன். எப்டின்னு கேக்குறவங்களுக்கு ஒரு குட்டி ஸ்டோரி🍺

“சனிக்கிழம ஆனா கன்பார்ம் சரக்கடிப்பேன்.” “அப்ப மத்தநாள்லாம் அடிக்கமாட்டிங்களாண்ணே”. “ஏய் பண்ணி பெல்லாவ் !!மத்த நாள்லாம் டெபனைட்லி சரக்கடிப்பேன் ”

இதே மாதிரி ஒரு item என்கிட்டயும் ஒன்னு இருக்கு . “திங்ககிழம ஆனா கன்பார்ம் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட மாட்டேன். அப்ப மத்தநாள்ல காலைல சாப்பிட்ருவியா. அய்யிய்யோ funny buggar டெபனைட்லி மத்த நாளும் காலைல சாப்பிட மாட்டேன் ”

ஆனா லாஜிக்படி பாத்தா கரெக்டு. காலைல 7.30 க்ளாஸ். அடிச்சு புடிச்சு கிளம்பி குளிச்சு 7.45க்கு க்ளாஸ் போனாலே அதிசயம்தான் .இதுல காலை சாப்பாடுலாம் கனவுலயே சாப்பிட்டுக்க வேண்டியதுதான். அதுவும் திங்ககிழமலாம் improbability of the impossible. ஏன்னா சனிக்கிழம நைட்டு ஆட்டம்போட்டு லேட்நைட் தூங்குனா ஞாயித்துக்கிழம எந்திரிக்கவே மதியம்மேல ஆகிரும். அப்ரம் நைட்டு சீக்கிரமாவா தூக்கம்வரும் ? மறுநாள் காலேஜ் இருக்கேன்னு நம்மள நாமளே தரதரன்னு பெட்டுக்கு இழுத்துட்டு போய் தூங்குனாதான் உண்டு. அப்டி இருக்கிற திங்ககிழமைல என்னைக்காச்சும் டைம் கிடைச்சு சாப்பிடபோன சட்டி நிறைய வச்சிருப்பானுங்க பாரு ஒரு item. இட்லி🤐. இத திங்கிறதுக்கு நா பசியாவே இருந்துருவேன்னு போயிருவேன். அப்டி இட்லி வெறுத்தவன்டா நானு. இன்னிக்கு நைட் சேர்த்தா இருபத்தி ஓராவது வேளை இட்லி போடுது எங்கம்மா. Why ma??🤒🤒