Home of Atrocities

குறிஞ்சி , முல்லை , மருதம்ன்னு கேள்வி பட்டதும் எல்லாருக்கும் ஒன்னொன்னு தோனும். தமிழ் , இலக்கணம்னு எதேதோ நினைவுக்கு வரலாம். ஆனா எங்களுக்கு எப்போதும் மொட்டமாடியும், ஓட்ட பக்கெட்களும் , மிட்நைட் டின்னர் சாப்டும் மெஸ் டேபுள்களும் , குப்பை சூழ் ரூம்களும் ,தூக்கங்களும் சிரிப்புகளும் , சந்தோஷங்களும் நிரம்பிய ஹாஸ்டல்ஸ்தான் ஞாபகம் வரும். குறிஞ்சி , முல்லைக்கெல்லாம் கருப்பொருள் , உரிப்பொருள்னு நெறைய இருக்கலாம் . ஆனா எங்க அட்ராய்ட்ஸ்க்கு ஒரே ஒரு உட்பொருள்தான்.

கலாய்தலும் கலாய்தல் நிமித்தங்களும்❤️

வாழ்க்கையோட எந்த நேரத்தையும் கலாய்ச்சுகிட்டே கடந்துபோற ஒரு கூட்டம். இயரே பெயில் ஆகி நிக்கும்போது தான் பெயிலானதுக்கு ஃபீலாகாமா ‘இர்ரா எங்கைகாச போட்டு உனக்கு ரீவேலுவேசன் போட்டு உன்ன பெயிலாக்குறன்டா’னு பாஸான ஒருத்தன கலாய்ச்சுட்டுருப்போம். ராகிங் பண்ண ஜூனியர்ஸ்ஸ கூப்ட்டு வச்சிட்டு நம்மளயே கலாய்ச்சிக்கிற வேற லெவல் சீனியர்ஸ் நாங்க. 😂

க்ளாஸ்ரூம் கொண்டாட்டங்கள் எல்லாமே தனிரகம். ‘புக்’ல துண்டு போட்டு பெஞ்ச் பிடிச்சு தூங்கலாம், பாதி க்ளாஸ் காலியா கிடக்கும்போதே புல் அட்டெண்ட்டென்ஸ் கொடுத்ததுக்கெல்லாம் முப்பது பையர் விடலாம். எல்லாத்துக்கும் மேல இல்லாத கால்குலேட்டர்ல டவுட்டு கேட்டு க்வஸ்டீன் பேப்பர் திருடனதெல்லாம் கின்னஸ் புக்ல ரெக்கார்ட்டா எழுதலாம். ரெக்கார்ட் எழுது கரெக்ட் டைம்ல சம்மிட் பண்றதெல்லாம் தனி கலை. அதெல்லாம் மூனு வருஷ ப்ராக்டிஸ்க்கு அப்ரமும் இன்னும் கைகூடல.

அலறிஅடிச்சிட்டு போற அந்த 7.30 க்ளாஸ் , க்ரௌண்ட்ல நாயா சுத்துற அந்த மூனு ரவுண்ட் , ஈவ்னிங் குடிக்கிற “க்ளாஸி” டீ , தியரி கக்ளாஸ்ல தூங்குறதுக்குனே அளவெடுத்து வச்ச மாதிரி ஒவ்வொரு செமஸ்டர்லயும் வர்ர நாலு கோர்ஸ் , எதுக்கு போறோம்னே தெரியாத டூர்ஸ் , அந்த டூர் பஸ் கொண்டாட்டங்கள் , ஜாலி பங்சன்ஸ் எல்லாத்தையும் மிஸ் பண்ணாலும் இப்போ ரொம்ப மிஸ் பண்றது அந்த 7ம் நம்பர் ரூம.

இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சா இப்டிதான் இந்த காலேஜ் லைப்ப மிஸ் பண்ணுவீங்கன்னு ட்ரெய்லர் போட்டு காமிக்கிறதுக்கே இந்த லாக்டவுன் வந்துச்சோ நினைக்கிறேன். இன்னும் நெறைய சொல்லலாம். போதும். கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும்

அன்பு ஒன்றுதான் அட்ராய்ட்ஸ்❤️

2 thoughts on “Home of Atrocities

    1. உன் கவிதையை நீ எழுது
      எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
      எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
      நீ அர்ப்பணித்து கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
      உன்னை ஏமாற்றும் போலி புரட்சியாளர்கள் பற்றி எழுது
      சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
      நீ போடும் இரட்டைவேடம் பற்றி எழுது
      எல்லாரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
      எவரிடமும் அதைக்காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது
      எழுது உன் கவிதைகளை நீ எழுது
      அதற்கு உனக்கு வக்கில்லை என்றால் ஒன்று செய்
      உன் கவிதைகளை நான் ஏன் எழுதவில்லை என்று
      என்னைக் கேட்காமலேயினும் இரு

      Like

Leave a reply to Dinesh Tamilan Cancel reply